சென்னை,
கூச்ச சுபாவமுள்ள பள்ளி மாணவியிலிருந்து நட்சத்திரமாக உயர்ந்த தனது பயணம் குறித்து பூஜா ஹெக்டே நினைவுகூர்ந்தார்.
பாலிவுட், தென்னிந்திய சினிமா என கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் 'முகமூடி', 'பீஸ்ட்' ஆகிய படங்களில் நடித்தார். விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு வர இருக்கிறது.
இதற்கிடையில், இவருக்கு பான்-இந்தியா ஸ்டைல் ஐகான் ஆப் தி இயர் விருந்து வழங்கப்பட்டது.
இந்நிலையில், தனது பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பூஜா ஹெக்டே, ஆசிரியர்களை மீண்டும் சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்தார். அவர் பகிர்ந்த பதிவில்,
"இந்த வாரம் என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான வாரமாக அமைந்தது. 'பான்-இந்தியா ஸ்டைல் ஐகான் ஆப் தி இயர்' விருதை பெற்றேன். அதேபோல், நான் படித்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, என் ஆசிரியர்களை மீண்டும் சந்தித்தேன்.
பள்ளியில் மிகவும் அமைதியாக , புத்தகங்களில் ஆர்வம் கொண்ட, மிகவும் கூச்ச சுபாவமுள்ள அந்த சிறுமி, இன்று தனது பணிக்காக அங்கீகாரம் பெறுவதை நினைத்து நெகிழ்ச்சி அடைகிறாள். தொடர்ந்து என் கனவுகளை நோக்கி கடினமாக உழைப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.