சினிமா செய்திகள்

நடிகர் சல்மான்கானுடன் பூஜா ஹெக்டே காதல்?

இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் சல்மான்கானுக்கு 57 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே சக நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார், இந்த நிலையில் சல்மான்கானுக்கும், பூஜா ஹெக்டேவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

சல்மான்கானுடன் கிஸி கா பாய் கிஸி கி ஜான் இந்தி படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை சல்மான்கானே தயாரித்து இருக்கிறார். தான் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இருவரும் ஜோடியாக சுற்றி வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் திரையுலகில் பேச்சு நிலவுகிறது. சல்மான்கானை காதலிக்கிறீர்களா என்று பூஜா ஹெக்டேவிடம் கேட்டபோது, "நான் இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன். தனியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் நடிப்பதில் மட்டுமே எனது முழு கவனமும் உள்ளது''என்றார்.

அவர் மறுத்தாலும் இருவரும் காதலிப்பது உண்மைதான் என்று இந்தி திரையுலகினர் கிசுகிசுக்கிறார்கள். பூஜா ஹெக்டே தமிழில் ஜீவாவுடன் முகமூடி, விஜய் ஜோடியாக பீஸ்ட் படங்களில் நடித்து இருக்கிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு