சினிமா செய்திகள்

ஆபாச பட வழக்கு: கணவரை பிரியும் ஷில்பா ஷெட்டி?

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதால் மனம் உடைந்த நிலையில் இருக்கிறார்.

தினத்தந்தி

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதால் மனம் உடைந்த நிலையில் இருக்கிறார். இந்த குற்றத்தில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் நேரில் விசாரணை நடத்தியது இன்னும் அவரை நிலைகுலைய செய்துள்ளது.

போலீசார் முன்னிலையில் கணவரிடம், உங்களால் குடும்பத்தின் நற்பெயர் கெட்டுப்போனது. தொழில்களில் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டனர். நிதி இழப்புகளும் ஏற்பட்டு உள்ளது. இத்தனை ஆண்டுகள் நான் சம்பாதித்த பெயரும் புகழும் பாதாளத்துக்கு சென்றுவிட்டது'' என்று சொல்லி கதறி அழுதுள்ளார். போலீசார் தலையிட்டு சமரசம் செய்துள்ளனர்.

சில நடிகைகளும், மாடல் அழகிகளும் கட்டாயப்படுத்தி தங்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக புகார் கூறிவருவதால் ராஜ்குந்த்ராவுக்கு தண்டனை கிடைப்பது உறுதியாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாக இந்தி பட உலகில் தகவல் பரவி வருகிறது.

ராஜ்குந்த்ரா சம்பாதித்த பணத்தில் தனக்கு எதுவும் வேண்டாம் என்று அவர் தெரிவித்து விட்டதாகவும் நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறு செய்து விட்டேன் என்று ஷில்பா ஷெட்டி பதிவு வெளியிட்டார். ராஜ்குந்த்ராவை திருமணம் செய்ததைத்தான் தவறு செய்துவிட்டேன் என்று ஷில்பா ஷெட்டி சொல்வதாக வலைத்தளத்தில் ரசிகர்கள் குறிப்பிட்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு