சினிமா செய்திகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடிக்கும் 'போர் தொழில்' படத்தின் போஸ்டர் வெளியீடு

‘போர் தொழில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது,

தினத்தந்தி

சென்னை,

'தெகிடி', 'ஓ மை கடவுளே' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் கவுதம் மேனன், வெங்கட் பிரபு, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

Hearty wishes to the team!! Here is da first look of #porthozil @ApplauseSocial @epriusstudio @nairsameer @deepaksegal @e4echennai @vigneshraja89@ashokselvan @realsarathkumar @nikhilavimal1 @SakthiFilmFctry pic.twitter.com/FzmHMAnQmX

venkat prabhu (@vp_offl) May 17, 2023 ">Also Read:

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது