சினிமா செய்திகள்

அஜித்தின் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைப்பு - படக்குழு அறிவிப்பு

அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா 2ஆவது அலை காரணமாக அஜித்தின் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

"எங்கள் நிறுவனத்தில் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில் மே 1ம் தேதி அஜித்குமாரின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவதாக கூறியிருந்தோம். அந்த அறிவிப்பு வெளிவரும்போது கொரோனா இரண்டாவது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல இருக்கும் என்றோ எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரத்தை இழந்து உற்றார், உறவினர் உயிரிழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.

மேலும், இந்த அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ புராஜக்ட்ஸ், படத்தில் நடித்துள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்துள்ள முடிவின்படி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரின் நலனுக்காகவும், பாதுகாக்கவும் பிரார்த்திப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்தினை இயக்குநர் வினோத் இயக்கிவருகிறார். மிக பெரிய பட்ஜெட்டில் போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் கதாநாயகியாக ஹுமா குரேஷி மற்றும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்