சினிமா செய்திகள்

தியேட்டர் திறப்பு தள்ளிவைப்பு; நயன்தாராவின் பக்தி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது

கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் முடங்கி உள்ளது. இதனால் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி, வைபவ் நடித்துள்ள லாக்கப் உள்ளிட்ட படங்களை இணைய தளமான ஓ.டி.டி.யில் வெளியிட்டுள்ளனர். சூர்யாவின் சூரரை போற்று அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

மீண்டும் அடுத்த மாதம் 30-ந்தேதி வரை தியேட்டர்களை மூடி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் மேலும் பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன. ஏற்கனவே விஷால் நடித்துள்ள சக்ரா, தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம், விஜய்சேதுபதியின் ரணசிங்கம், சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா, பிஸ்கோத், கீர்த்தி சுரேசின் குட்லக் சகி, ஐஸ்வர்ய ராஜேஷின் பூமிகா, அரவிந்த சாமி, திரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை2 உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் என்ற பக்தி படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தை தொலைக்காட்சியில் தீபாவளிக்கு ஒளிபரப்ப இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்