சினிமா செய்திகள்

இந்தி நடிகையுடன் பிரபாஸ் காதல்?

இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது.

தினத்தந்தி

பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் தயாராகும் இவரது படங்களை மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் பணம் பார்க்கிறார்கள். இதனால் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி விட்டார். பிரபாசும், நடிகை அனுஷ்காவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. ஆனால் காதலிப்பதை இருவருமே உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாசும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு இணைய தளங்களில் தீயாக பரவி வருகிறது. பிரபாஸ் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் நடிக்கிறார். இதில் சீதை கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கிருத்தி சனோன் அளித்த பேட்டியில், ''பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார். இருவரும் காதலிப்பதை இந்தி நடிகர் வருண் தவானும் மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்