சினிமா செய்திகள்

பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் டீசர் வெளியானது..!

பிரபாஸ் நடிக்கும் 'சலார்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். 'சலார்' படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் தலா ரூ. 10,000 அன்பளிப்பாக கொடுத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் 'சலார்' படத்தின் டீசர் இன்று காலை 5.12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சலார் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு