சினிமா செய்திகள்

பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் புதிய படம்.. ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு

இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்குகிறார்.

தினத்தந்தி

சென்னை,

நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ''டார்லிங்'', ''100'', ''எனக்கு இன்னொரு பெயர் இருக்கு'' போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

பிரபுதேவா, வடிவேலு ஏற்கனவே இணைந்து ''காதலன்'', ''எங்கள் அண்ணா'', ''மனதை திருடிவிட்டாய்'', ''மிஸ்டர் ரோமியோ'' போன்ற படங்களில் நடித்தனர். பிரபுதேவா இயக்கிய ''போக்கிரி'' மற்றும் ''வில்லு'' திரைப்படங்களில் வடிவேலு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இவர்கள் கூட்டணியில் உருவாகி படத்தின் ஹாலோவீன் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. விரைவில் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை