சினிமா செய்திகள்

4 நாட்களில் ரூ. 83 கோடி வசூலித்த பிரதீப் ரங்கநாதனின் “டியூட்”

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டியூட்’ படம், 4 நாட்களில் ரூ. 83 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் டிராகன் படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி'என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.

கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் பிரதீப் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் டியூட் படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி கலந்த படமாக இப்படம் கடந்த 17ம் தேதி வெளியானது.

டியூட் படத்தில் நடித்த படப்பிடிப்பு காட்சிகளை பிரதீப் ரங்கநாதன் வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம், 4 நாட்களில் ரூ. 83 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து