சினிமா செய்திகள்

அழகு பற்றி சினேகாவிடம் கேள்வி கேட்டவரை மிரட்டிய பிரசன்னா

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சினேகாவிடம், ‘எப்போதுமே அழகு குறையாமல் இருக்கிறீர்களே... வயது ஆகாதா உங்களுக்கு?' என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

தினத்தந்தி

கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு, புன்னகை அரசி' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், சினேகா. முன்னணி நடிகையாக இருந்தபோதே, நடிகர் பிரசன்னாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிள்ளைகள் பிறந்ததற்கு பிறகு சினிமா பக்கம் வராமல் இருந்த சினேகா, டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். விஜய்யுடன் தி கோட்' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். நடிப்பு தாண்டி புடவை தொழிலிலும் கலக்கி வருகிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சினேகாவிடம், எப்போதுமே அழகு குறையாமல் இருக்கிறீர்களே... வயது ஆகாதா உங்களுக்கு? வயது என்பது வெறும் எண் தானா?' என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது அருகில் இருந்த பிரசன்னா சிரித்தபடியே, ஏய்...' என்று நாக்கை கடித்து கொன்றுவிடுவேன் என்பது மாதிரி செய்கை காட்டினார்.

இதையடுத்து, மனதால் சந்தோஷமாக இருந்தால்தான் முகத்தில் தெரியும். அதற்காக பிரசன்னாவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் என்று சினேகா பதிலளித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்