சென்னை,
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தின் நாயகர் பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்து ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது.
இந்த நிலையில் சலார் படத்தின் அப்டேட் குறித்த தகவலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பகல் 12.58 மணிக்கு சலார் படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.