சினிமா செய்திகள்

தமன்னாவுக்கு விருது

தினத்தந்தி

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த கண்ணே கலைமானே படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரான்சில் நடந்த இந்தோ-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே படம் திரையிடப்பட்டு மூன்று விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தயாரிப்பாளருக்கான விருது உதயநிதி ஸ்டாலினுக்கும் சிறந்த நடிகைக்கான விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்துள்ளது.

இதுகுறித்து டைரக்டர் சீனு ராமசாமி கூறும்போது "இயற்கை விவசாயிக்கும் கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் இருந்து வந்த நேர்மையான வங்கி அதிகாரிக்குமான வாழ்வியல் உண்மை பேசும் 'கண்ணே கலைமானே' படம் இரண்டு விருதுகளை கொல்கத்தா திரைப்பட விழாவில் பெற்ற நிலையில் கொரோனா எனும் கொடிய நோய் வந்து அனைத்தையும் முடக்கிப் போட்டது. மீண்டும் இந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு நம்பிக்கையோடு அனுப்பினோம். எங்கள் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் பாரம்பரியம் மிக்க இந்தோ-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகள் பெற்றது மகிழ்ச்சி" என்று கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை