சினிமா செய்திகள்

நடிகர்கள் பிருதிவிராஜ், துல்கர் சல்மானுக்கு கோல்டன் விசா

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமீரக அரசு 10 ஆண்டுகளுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது. ஏற்கனவே பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

தினத்தந்தி

கடந்த ஜூலை மாதம் துபாயில் வசித்து வரும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கோல்டன் விசா பெற்றார். சமீபத்தில் முன்னணி மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், இந்தி தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் ஆகியோருக்கும் கோல்டன் விசா கிடைத்தது.

இந்த நிலையில் மலையாள நடிகர்கள் பிருதிவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோருக்கும் தற்போது கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது. இருவரும் பல தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்கள். துல்கர் சல்மான், நடிகர் மம்முட்டியின் மகன். அவர் கூறும்போது, சர்வதேச அளவில் திறமையாளர்களை ஊக்குவிக்கும் ஐக்கிய அமீரகத்தின் அங்கீகாரம் கிடைத்தது பாக்கியம் என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்