சினிமா செய்திகள்

கண் சிமிட்டல் மூலம் பிரபலம் : இந்தி படத்தில் பிரியா வாரியர்

புருவ அசைவு மற்றும் கண்சிமிட்டல் மூலம் இந்திய பட உலகையும், ரசிகர்களையும் தன் பக்கம் திருப்பியவர் பிரியா வாரியர்.

ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலரே பூவி என்ற பாடலில் இந்த காட்சி இருந்தது. பிரியா வாரியரின் கண் சிமிட்டல் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதனால் டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கையில் பிரபல இந்தி நடிகைகளை பின்னுக்கு தள்ளினார். இந்த பாடல் மத உணர்வுகளை புண்படுத்துவதாக எதிர்ப்பு கிளம்பின. போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. கோர்ட்டிலும் வழக்குகள் தொடர்ந்தனர். சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது.

2018-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் பிரியா வாரியர் 4-வது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் பிரியா வாரியருக்கு இந்தியில் தயாராகும் தக்த் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. இதில் ரன்வீர்சிங், விக்கி கவுசல், கரீனா கபூர் உள்பட முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர். கரண் ஜோகர் இயக்குகிறார்.

ரன்வீர் சிங், விக்கி கவுசல் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரியா வாரியர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு