பிரியதர்ஷன் டைரக்ஷனில் சமீபத்தில் நிமிர் என்ற படம் வெளியானது. அதில், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து இருந்தார்.
பிரியதர்ஷனும், நடிகை லிசியும் காதல் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகளாக இருந்தார்கள். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டார்கள்.
இவர்களின் மகள் கல்யாணி. தெலுங்கு நடிகர் நாகார்ஜுன் மகன் அகில் நடித்த ஹலோ (தெலுங்கு) படத்தின் மூலம் கல்யாணி கதாநாயகியாக திரையுலகுக்கு அறிமுகமானார். சர்வானந்த் ஜோடியாகவும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.