சினிமா செய்திகள்

கணவருடனான 10 வயது வித்தியாசம்... மனம் திறந்த பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா, கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார்

மும்பை,

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனஸுடனான 10 வயது வித்தியாசம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

10 வயது இளையவர்

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். இவர் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிதாக தெரியாது

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய பிரியங்கா சோப்ரா, "எனக்கும் என் கணவருக்கும் 10 வயது வித்தியாசம் உள்ளது. ஆனால், அது எனக்கு ஒரு பெரிய விஷயமாகவே தோன்றவில்லை. நீங்கள் விரும்பும் குணாதிசயங்கள் அனைத்தும் கொண்ட ஒருவரை வாழ்க்கை துணையாக பெறும்போது, வயது என்பது ஒரு எண்ணாக மட்டுமே இருக்கும். பெரிதாக தெரியாது" என்று கூறினார்.

'வாரணாசி'

இதற்கிடையில், பிரியங்கா சோப்ரா தற்போது எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்தாண்டு ஏப்ரல் 7-ம் தேதி வெளியாக உள்ளது.