சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் டி.சிவா இல்ல திருமண வரவேற்பு- விஜய் நேரில் வாழ்த்து

தயாரிப்பாளர் டி.சிவா இல்ல திருமண வரவேற்பில் விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பொதுச்செயலாளருமான அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா - அருணா தம்பதியரின் மகள் டாக்டர் தக்ஷிணா சிவாவுக்கும், சீ.பிரபாகரன் - கோ.அங்கயற்கண்ணி என்ற பாரதி தம்பதியரின் மகன் டாக்டர் சந்தீப் பிரபாகருக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி தஞ்சையில் திருமணம் நடந்தது. சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நேற்று இரவு நடந்தது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

மேலும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்பட அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்கள் கார்த்தி, ஜீவா, ராதாரவி, சத்யராஜ், செந்தில், சசிகுமார், பொன்வண்ணன், நடிகை மீனா, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு, ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், தியாகராஜன், ஐசரி கணேஷ் உள்பட திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்