சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று உள்ளார்.

தினத்தந்தி

சென்னை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தல் நடைபெற்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்கு எண்ணும் பணி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இன்று நடந்தது. தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் முரளி, தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று உள்ளார்.

முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் 337 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு