சினிமா செய்திகள்

ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட நடிகை யாஷிகாவை சாடிய ரசிகர்கள்

சமீப காலமாக நடிகைகளுக்குள் யார் அதிக கவர்ச்சி காட்டுவது? என்பதில் போட்டி நடக்கிறது. டுவிட்டர், முகநூலை திறந்தால் அரைகுறை உடையில் ஆபாசமாக வந்து அதிர வைக்கிறார்கள்.

பட வாய்ப்புகளுக்காக இப்படி செய்வதாக விமர்சனங்கள் வருகின்றன. இந்த வரிசையில் நடிகை யாஷிகாவும் சேர்ந்துள்ளார்.

இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக வந்தார். துருவங்கள் பதினாறு, நோட்டா படங்களிலும் நடித்து இருந்தார். இப்போது 3 படங்களை கைவசம் வைத்துள்ள அவர் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வலைத்தளத்தில் வெளியிட்டு உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

அவர் நினைத்ததுபோல் படத்துக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மாறாக கண்டனங்கள் குவிந்தன. உனக்கு வெட்கமே இல்லையா என்று ஒரு பெண் சாடினார். இப்படி ஆடை உடுத்துவதற்கு பதிலாக அழகான ஆடை அணியலாமே என்று ஒருவர் கூறினார்.

இன்னொருவர் நீங்கள் எந்த அளவுக்கு உடம்பை காட்டுகிறீர்களோ அந்த அளவுக்கு வாய்ப்புகளை இழந்து நகைச்சுவை நடிகர்களுடன் ஜோடிசேர வேண்டி வரும். காலம் கடந்து இதை உணர்வீர்கள் என்று ஆவேசப்பட்டார். மேலும் சிலர் அடுத்த சன்னிலியோன், யாஷிகா என்று கூறியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்துள்ள யாஷிகா எனது உடலில் பிரச்சினை இல்லை. உங்கள் கண்களில்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்