சினிமா செய்திகள்

“புஷ்பா 3” கண்டிப்பாக உருவாகும் - இயக்குநர் சுகுமார்

துபாயில் நடந்த விருது விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் சுகுமார், ‘புஷ்பா3’ கண்டிப்பாக உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான படம் புஷ்பா தி ரூல். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் ரூ.400 கோடி வசூல் செய்து நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் புஷ்பா தி ரைஸ் (புஷ்பா 2) வெளியானது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனாவுடன் பஹத் பாசில், ஜெகபதி பாபு, சுனில் உள்பட பலர் நடித்தனர்.

புஷ்பா 2 படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. இதன் அடுத்த பாகம் உருவாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அல்லு அர்ஜுன் மற்ற படங்களில் பிசியாகி விட்டதால், புஷ்பா 3 உருவாகாது என்று செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், துபாயில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சுகுமார், புஷ்பா3 கண்டிப்பாக உருவாகும் என்று தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சுகுமார், ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இப்படங்களை இருவரும் முடித்தபின், புஷ்பா3 உருவாகும் என்று தெரிகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்