சினிமா செய்திகள்

'மஞ்சுமெல் பாய்ஸ்': 'பாராட்டுக்கு உண்மையிலேயே தகுதியானதுதான்'- ராஷி கன்னா

'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் கடந்த 5-ம் தேதி ஓடிடியில் வெளியானது.

தினத்தந்தி

சென்னை,

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது.

இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது 'மஞ்சுமெல் பாய்ஸ்'. 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் உலகளவில் ரூ.240 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் கடந்த 5-ம் தேதி ஓடிடியில் வெளியானது.

இந்நிலையில், நடிகை ராஷி கன்னா 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பகிர்ந்துள்ளார். அதில், 'மஞ்சுமெல் பாய்ஸ்' ஒரு ரத்தினம். சிறந்த திரைப்பட அனுபவம். படம் பெறும் பாராட்டுக்கு உண்மையிலேயே தகுதியானதுதான். முழு குழுவிற்கும் பாராட்டுகள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து