மும்பை,
திரையுலகில் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும் தாங்கள் விரும்பும் நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வகையில், நடிகை ராஷி கன்னா தனது நீண்டநாள் விருப்பம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் நட்சத்திரமான கார்த்திக் ஆர்யன் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசைகளில் ஒன்று என்று ராஷி கன்னா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அவருடன் எந்த மாதிரியான படத்தில் நடிக்க விரும்புகிறார் என்பதையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஒரு ஆழமான மற்றும் உணர்வுபூர்வமான காதல் கதையில் நடிக்க விரும்புவதாக ராஷி கன்னா தெரிவித்துள்ளார். எமோஷனல் அம்சங்கள் நிறைந்த காதல் கதையில் தங்களின் ஜோடிப் பொருத்தம் சிறப்பாக அமையும் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
ராஷி கன்னா அண்மையில் பவன் கல்யாண் நடித்த உஸ்தாத் பகத் சிங் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனினும், அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. தற்போது ராஷி கன்னா, இந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.