சினிமா செய்திகள்

ரகுல்பிரீத் சிங் நடிக்க விரும்பும் கதைகள்

தமிழில் புத்தகம், என்னமோ எதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே. உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் தற்போது 5 இந்தி படங்களில் நடிக்கிறார்.

தினத்தந்தி

இந்தியன் 2 படமும் கைவசம் உள்ளது. ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், நான் கொண்ட போலம் என்ற தெலுங்கு படத்தில் முழுக்க ஆடு மேய்க்கிற பெண்ணாக நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. காடுகளில் ஆடுகளை மேய்க்கும்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைகளுக்காய் சென்றது. கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது. அப்போதுதான் ஆடு, மாடு மேய்ப்பவர்களின் கஷ்டங்கள் எனக்கு புரிந்தது. அந்த படத்தில் நடிக்க கஷ்டப்பட்டேன்.

ஓ.டி.டி. படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன. எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். இவ்வளவு நாட்களாக நடித்துவிட்டு இப்போதும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்காமல் இருந்தால் சரியல்ல. கதைகள் தேர்வில் கவனமாக இருக்கிறேன். எனக்கு கனவு கதாபாத்திரம் இல்லை. ஆனால் ஒரு படம் நடித்தால் வாழ்நாள் முழுவதும் ரசிகர்கள் மனதில் பசுமையாக நிலைத்து இருக்க வேண்டும் என்று மட்டும் ஆசைப்படுகிறேன். பாகுபலி மாதிரி கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது என்றார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்