சினிமா செய்திகள்

வெயிலில் நிற்க ரகுல் பிரீத் சிங் யோசனை

வெயிலில் நிற்குமாறு நடிகை ரகுல் பிரீத் சிங் யோசனை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி


கொரோனாவால் மக்கள் ஊரடங்கு அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பு இருந்தே நான் வீட்டில்தான் இருக்கிறேன். கொரோனா வந்த பிறகு அதை ஒழிக்க எதுவும் செய்ய முடியாது. வராமல் தடுக்க வேண்டுமானால் வீட்டோடு முடங்கி கிடக்க வேண்டியதுதான். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் போதும். இந்த கஷ்ட காலத்தை கூட சந்தோஷமாக மாற்றிக்கொள்ள முடியும்.

வீட்டில் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள். ஒருவரோடு ஒருவர் மனம் விட்டு பேசுங்கள். வீடுகளில் ஜாக்கிரதையாக அதே நேரத்தில் சந்தோஷமாகவே இருங்கள். கொஞ்ச நேரம் வெயிலில் நின்றால் கூட நல்லதுதான்.

நமது நாட்டில் இப்போது வெயில் காலம். வெயிலுக்கு கொரோனா வராது என்று சந்தோஷப்பட்டோம். ஆனால் இதைவிட அதிக வெயில் இருக்கும் துபாய் போன்ற நகரங்களில் கூட கொரோனா வந்ததால் அந்த நம்பிக்கையும் போய்விட்டது. ஆனாலும் அதை வராமல் தடுக்க எதை செய்ய வேண்டுமோ? அதை செய்வோம்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்