சினிமா செய்திகள்

பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு - நடிகை ஓவியா

பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிக ஓவியா பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவது சரியான முடிவு என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 'திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு.

சிறு வயதிலேயே பல விஷயங்களைத் தியாகம் செய்து மிகப் பெரிய பொறுப்புகளைச் சுமக்கத் தேவையில்லை. இதை நான் வலுவாக ஆதரிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு