சினிமா செய்திகள்

ரஜினியின் 169-வது படம் பெயர் ‘பாஸ்'?

ரஜினியின் 169-வது படத்திற்கு 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் பாஸ் என்ற பெயரும் இருக்கிறது என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

தினத்தந்தி

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 169-வது படம். நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை டைரக்டு செய்துள்ளார். விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். ரஜினி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யாராயிடமும், நகைச்சுவை வேடத்துக்கு வடிவேலுவிடமும் பேசி வருவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ரஜினியுடன் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யாராயும், சந்திரமுகி படத்தில் வடிவேலுவும் நடித்து இருந்தனர்.

ரஜினியின் 169-வது படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே எல்லா மொழிக்கும் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில் பெயர் வைக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது 5 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் பாஸ் என்ற பெயரும் இருக்கிறது என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்