சினிமா செய்திகள்

உண்மை கதையில் ரஜினி?

ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கி பிரபலமான ஞானவேல் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

170-வது படத்தின் கதை, கதாநாயகி, படத்தில் இடம்பெறும் இதர நடிகர், நடிகைகள் விவரங்கள் போன்ற எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் படம் குறித்து யூகமான பல்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் நடந்த பரபரப்பான ஒரு உண்மை சம்பவம் பற்றிய கதையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும், இதில் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் பரவி உள்ளன. ஜெய்பீம் படமும் ஜெயிலில் போலீஸ் தாக்கி உயிர் இழந்த இளைஞரின் உண்மை சம்பவ கதையாக வந்தது குறிப்பிடத்தக்கது.

தூக்கு தண்டனை கூடாது என்பது ஒரு சாரார் கருத்தாக உள்ளது. அந்த கருத்து ரஜினி படத்தின் பிராதானமான மையக்கருவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் மற்றும் தோற்றத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்