சினிமா செய்திகள்

ரஜினி - சுந்தர்.சி விவகாரம்: ரசிகரின் ஏடாகூட கேள்விக்கு, குஷ்புவின் ‘பளார்' பதில்

ரஜினியின் படத்தை இயக்கவிருந்த சுந்தர்.சி, அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சுந்தர் சி இயக்கப்போவதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி நேற்று முன்தினம் இரவு அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்த படம் எனக்கு பெரும் கனவாக இருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக கனத்த இதயத்துடன் இதில் இருந்து விலகுகிறேன்' என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சுந்தர் சி விலகலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

இதுதொடர்பான ஒரு விவாதத்தில் ஒருவேளை படத்தில் குஷ்புவுடன் ஆடலாமா? என கேட்டிருப்பார்களோ...' என ஏடாகூடமான கேள்வியை ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அவருக்கு குஷ்பு தனது பாணியில் பளார்' பதில் அளித்துள்ளார்.

அந்த பதிவில், இல்ல... உங்க வீட்டுல இருந்து யாரையாவது ஆட வைக்கலாம்னு நினைச்சோம்'' என குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார்.

குஷ்புவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து