சினிமா செய்திகள்

அமெரிக்காவில் ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா தனுஷ்...! வைரலாகும் புகைப்படம்

அமெரிக்க ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார்.

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்னர் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சமீபத்தில் மீண்டும் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார். தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய அவர் கடந்த 19-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அமெரிக்க ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன.ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் அமெரிக்காவின் மாயோ ஆஸ்பத்திரியில் பரிசோதனை முடிந்து வெளியேறுவதைக் கண்ட ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்து உள்ளார்.அ ந்த புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

ரஜினி அமெரிக்காவில் சில நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிகிறது.

ரஜினிகாந்த், லதா, தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகள் இன்னும் சில நாட்களில் இந்தியா திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் நாடு திரும்பியதும், ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் அந்தந்த படங்களின் படப்பிடிப்பை மீண்டும் கலந்து கொள்வார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...