சினிமா செய்திகள்

கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் பாராட்டு

விக்ரம் திரைப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், கமல்ஹாசனை தொலைபேசி வாயிலாக அழைத்துப் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'விக்ரம்' படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடிப்பு பெரியளவில் பேசப்படுகிறது. சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் ரசிக்கும்படியாக நடித்திருக்கிறார்கள். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருடங்களுக்குப் பிறகு வெளியான இந்தப் படம், இதுவரை ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்திருக்கிறது.

இந்தநிலையில் 'விக்ரம்' படத்தை ரஜினிகாந்த் பார்த்துள்ளார். இதில் கமல்ஹாசன் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன ரஜினிகாந்த், உடனடியாக தொலைபேசியில் அவரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது, 'கலக்கிட்டீங்க கமல், படம் ரொம்ப சூப்பரா இருக்கு' என்று பாராட்டி கூறியிருக்கிறார். படக்குழுவினர் அனைவருமே சிறப்பாக உழைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கும் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

உலகநாயகனை, சூப்பர் ஸ்டார் மனம் திறந்து பாராட்டிய தகவலால் இரு தரப்பு ரசிகர்களுமே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது