சினிமா செய்திகள்

படப்பிடிப்புக்காக சென்ற ரஜினிகாந்த்... தடுத்து நிறுத்திய அதிகாரி... வெளியான காட்சிகள்

'வேட்டையன்' படப்பிடிப்புக்காக ஐதராபாத் செல்ல ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.

தினத்தந்தி

சென்னை,

'ஜெய் பீம்' படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 'வேட்டையன்' படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் டிவி பிரபலம் விஜே ரக்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தமிழ்நாட்டிலும் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'வேட்டையன்' படப்பிடிப்புக்காக ஐதராபாத் செல்ல ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய அதிகாரி, நடிகர் ரஜினிகாந்தை பரிசோதித்து பின்னர் அனுமதித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை