2.0 படம் உருவானது எப்படி? என்ற மேக்கிங் வீடியோ பல லட்சம் செலவில் தயாராகி இருந்தது. அந்த வீடியோ படம் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது. இது, படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
மேக்கிங் வீடியோவை திருட்டுத்தனமாக வெளியிட்டது யார்? அவர் கைக்கு அந்த படம் எப்படி சிக்கியது? என்பது பற்றி பட நிறுவனம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
பாதுகாப்பை மீறி, எல்லா பெரிய பட்ஜெட் படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ், 2.0 படத்தையும் பாதுகாப்பை மீறி, இணையதளத்தில் வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாக பேசப்படுகிறது. அதன் முயற்சியை எப்படி தடுப்பது? என்று பட நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது.