சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் பிறந்த நாள் தலைவர்கள்- முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னை 

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் ரசிகர்கள் திரண்டனர். 

ரஜினிகாந்த் பிறந்த நாளை  முன்னிட்டு அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு சமூகவலைதளத்தில் தமிழக பாரதீய ஜனதா தமிழிசை வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இன்று பிறந்தநாள் காணும் சகோதரர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு  தமிழக பா.ஜ.க சார்பில் எங்களது வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.

தமிழக் காங்கிரஸ் தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயேன் தனது டுவிட்டரில் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நடிகர் அமிதாப்பச்சன் தனது டுவிட்டரில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.