சினிமா செய்திகள்

இமயமலையில் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் சொன்ன தகவல்

இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் தியானம் செய்தார்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார பயணமாக இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டுள்ளார். ரிஷிகேஷ், கேதர்நாத்,பத்திரிநாத் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் ஆசிரமங்களுக்கு சென்று வழிபட்டார்.

தொடர்ந்து ரஜினிகாந்த், பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்தார். தியானத்தை முடித்து விட்டு வந்த ரஜினிகாந்திடம் வேட்டையன் மற்றும் கூலி படங்களின் அப்டேட் பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், வேட்டையன் படம் அக்டோபர் 10-ந் வெளியாகிறது. கூலி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 10-ம் தேதி தொடங்கும் என கூறி உள்ளார். இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை