சென்னை
நான் அரசியலுக்கு வருவேன் எனவும் இது காலத்தின் கட்டாயம் எனவும் நடிகர் ரஜினிகாந்த் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் அதற்கு முன்பு ஒவ்வொரு தெருவிலும் தனது ரசிகர் மன்றம் தொடங்கப்பட வேண்டும் எனவும் ரசிகர்களிடம் குறிப்பிட்டார்.
உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.
முதல் கட்டமாக கட்சியின் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நற்பணி இயக்க நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
ரஜினியின் இந்த அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த நீண்ட நாட்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி கூறி வந்த நிலையில், அவரது இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் https://www.rajinimandram.org என்ற ஒரு இணையதளத்தை உருவாக்கி இருப்பதாகவும் அதில் பதிவுசெய்து கோள்ளலாம் என தகவல் வெளியிடப்பட்டு உள்ளது அதன் முகப்பு பக்கத்தில்
நல்லதே நினைப்போம். நல்லதே பேசுவோம்.
நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும்!
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்குடி!
இந்த இணையதள செயலி மற்றும் வலைதள பக்கத்தில் உங்களை மன்றத்தின் உறுப்பினராக வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயலி நம்மிடையே தகவல் பரிமாற்றத்திற்கான ஊடகமாக மட்டுமின்றி, தமிழ்நாட்டில் நல்லதொரு மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாகவும் செயல்படும். உங்கள் அனைவருடைய ஒத்துழைப்புடனும்,நல் ஆதரவுடனும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் வளமான ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவோம். எனக் கூறப்பட்டு உள்ளது.
#Rajinikanth #RajiniMandram #Membership #Politics
Rajinikanth (@superstarrajini) 1 January 2018