சினிமா செய்திகள்

இன்று வெளியாகிறது 'வேட்டையன்' படத்தின் புது அப்டேட்!

வேட்டையன் படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்றது.

இந்நிலையில், வேட்டையன் படத்தின் புதிய அப்டேட் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்