சினிமா செய்திகள்

ராம் சரணின் “பெத்தி” படத்தின் முதல் பாடல் வெளியானது

ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் ‘பெத்தி’ படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

தினத்தந்தி

கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு ராம் சரண் பெத்தி படத்தில் நடித்து வருகிறார். உப்பெனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்குகிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.

ஜான்வி கபூரின் கதாபாத்திர போஸ்டரை பெத்தி படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார் நடிகர் ராம் சரண்.

இந்நிலையில், பெத்தி படத்திலிருந்து முதல் பாடலான ஜிகிரி ஜிகிரி பாடல் வெளியாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து