சினிமா செய்திகள்

ராமாயணம் படம்... பிரபாஸ் தோற்றத்தை விமர்சித்த ரசிகர்கள்

தினத்தந்தி

ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் என்ற படம் தயாராகி உள்ளது. இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானபோது அனிமேஷன் படம் போன்று இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பின.

இதையடுத்து கிராபிக்ஸ் காட்சிகளை மாற்றி அமைக்க படக்குழுவினர் திட்டமிட்டு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது பிரபாசின் ராமர் தோற்ற போஸ்டரை வெளியிட்டு உள்ளனர். இதையும் வலைத்தளத்தில் பலர் விமர்சித்தும், கேலி செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

பிரபாசின் ராமர் தோற்றம் பொருத்தமாக இல்லை. ராமர் வேடத்தில் இருக்கும் அவரது தலையில் கிரீடம் இல்லை. மேலும் அவர் அணிந்துள்ள உடை பொருத்தமாக இல்லை. அவரது பார்வையில் மென்மை தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

இதுபோல், "சீதை தோற்றத்தில் இருக்கும் கீர்த்தி சனோன் பாதங்களில் உள்ள விரலில் மெட்டி அணியவில்லை. நெற்றியில் குங்குமம் இல்லை. கழுத்தில் தாலி கூட இல்லை'' என்று கூறியுள்ளனர். இது பரபரப்பாகி உள்ளது.

எவ்வளவு விமர்சனம் வந்தாலும் இனிமேல் கிராபிக்சை மாற்றுவதோ, ரிலீசை தள்ளிப்போடுவதோ இல்லை என்று படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு