சினிமா செய்திகள்

வெப் தொடரில் ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன் நடித்துள்ள வெப் தொடருக்கு முகிலன் என்று பெயரிட்டுள்ளனர்.

தினத்தந்தி

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் நடிகர் நடிகைகள் பலரும் அதற்கு மாறி வருகிறார்கள். 20-க்கும் மேற்பட்ட வெப் தொடர்கள் படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நடிகை ரம்யா பாண்டியனும் வெப் தொடரில் நடிக்கிறார். இவர் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். டம்மி பட்டாசு, சமுத்திரக்கனியின் ஆண் தேவதை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ரம்யா பாண்டியன் நடித்துள்ள வெப் தொடருக்கு முகிலன் என்று பெயரிட்டுள்ளனர். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தயாராகி உள்ளது. நடன இயக்குனர் ராபர்ட், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் ராம் கதை எழுதி டைரக்டு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முகிலன் வெப் தொடர் வருகிற 30-ந்தேதி வெளியாகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை