சினிமா செய்திகள்

ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கிய விளம்பர படம்

அட்லி இயக்கத்தில் ரன்வீர், ஸ்ரீலீலா நடித்த சிங் நிறுவன விளம்பர படம் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.அல்லு அர்ஜுன் நடிக்கும் தனது ஆறாவது படத்தை இயக்குகிறார் அட்லி. சூப்பர் ஹீரோ மாதிரியான சயின்ஸ் பிக்சன் கதையில் பிரமாண்டமாக உருவாகும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பரம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த விளம்பரம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தின் டிரெய்லர் போல உள்ளது. பல பாலிவுட் படங்களின் பட்ஜெட்டை விட இந்த விளம்பரத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த விளம்பரம் அனைவரின் கவனத்தியும் ஈர்த்துள்ளது.

இந்த விளம்பரத்தில் சிங் நிறுவனத்தின் ஏஜெண்டாக ரன்வீர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.ரன்வீர் சிங் இதற்கு முன்பும் சிங் நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்திருந்தார். ரோஹித் ஷெட்டி இயக்கிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் விளம்பரத்தில் தமன்னாவுடன் இணைந்து ரன்வீர் சிங் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்