ராஷி கன்னா அளித்துள்ள பேட்டி வருமாறு:-
ஆரோக்கியத்தில் எனக்கு அக்கறை அதிகம். கொரோனா வருவதற்கு முன்பே தூசு உள்ள இடங்களில் கர்சீப்பை வைத்து முகத்தில் கட்டிக்கொண்டு போகும் பழக்கம் இருந்தது. அதனால் இப்போது முககவசம் அணிவது புதிய பழக்கமாகவோ கஷ்டமாகவோ எனக்கு தெரியவில்லை.நான் நீண்ட நாட்களாக வெந்நீர்தான் குடிக்கிறேன். சைவ உணவுக்கு மாறி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுதான் இப்போது முக்கியம். கொரோனாவை எதிர்கொள்ளும் சக்தி நம்மிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கத்தால் நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு கிடைக்கும். அதிக
உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் ஒரு நாளைக்கு 20 நிமிடம் நடக்கவாவது செய்யுங்கள். சம்பாதிக்கும் பணத்தில்தான் ஆனந்தம் என்பதை கொரோனா விரட்டி அடித்து ஆரோக்கியம்தான் பெரிய சொத்து என்பதை புரிய வைத்துள்ளது. இப்போது வரை ஆரோக்கியமான வாழ்வை கடைபிடித்தவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.''
இவ்வாறு ராஷிகன்னா கூறினார்.