சினிமா செய்திகள்

காதல் திருமணத்தை விரும்பும் ராஷிகன்னா

காதல் திருமணம் செய்ய நடிகை ராஷிகன்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கன்னா. தற்போது அரண்மனை 3-ம் பாகத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

எனக்கு பயமே கிடையாது. எதுவாக இருந்தாலும் எதிர்த்து போராடுவேன். நடை உடை பாவனை எல்லாவற்றையும் தன்னம்பிக்கை மாற்றிவிடும். அழகாகவும் தெரிய வைக்கும். வேலையும், வாழ்க்கையும் வேறு வேறு இல்லை. எனவே இரண்டையும் எப்படி நகர்த்துகிறீர்கள் என்ற கேள்விக்கே இடம் இல்லை. நான் எல்லோருடனும் சகஜமாக பழகுவேன். நெருக்கமான நண்பர்கள் என்று சினிமா துறையில் யாரும் எனக்கு இல்லை. சிறுவயது தோழிகளுடன் மட்டும் பழகி வருகிறேன். திருமணம் எப்போது என்று என்னிடம் கேட்கிறார்கள். நேரம் வரும்போது மனதுக்கு பிடித்தவரை சந்தித்தால் வீட்டில் சொல்லி குடும்பத்தினர் ஒப்புதலோடு காதல் திருமணம் செய்து கொள்வேன். அதாவது காதலித்து பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்வேன்.

இவ்வாறு ராஷி கன்னா கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்