சினிமா செய்திகள்

முத்த காட்சியில் ராஷ்மிகா - வைரலாகும் புகைப்படம்..!

ராஷ்மிகா மந்தனாவும் ரன்பீர் கபூரும் உதட்டோடு உதடு முத்தமிடும் புகைப்படம் வைரலாகிறது.

தினத்தந்தி

சென்னை,

நடிகைகள் பலர் முத்த காட்சிகளில் நடிக்க விரும்புவது இல்லை. இதற்காக பட வாய்ப்புகளை இழந்தாலும் கவலைப்படுவது இல்லை.

ஆனால் இன்னும் சில நடிகைகள் முத்த காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார்கள். அந்த பட்டியலில் ராஷ்மிகா மந்தனாவும் இருக்கிறார்.

'அனிமல்' என்ற இந்தி படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. அனிமல் படத்துக்கான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

அந்த போஸ்டரில் ராஷ்மிகா மந்தனாவும் ரன்பீர் கபூரும் உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சி இடம்பெற்று உள்ளது. இந்த புகைப்படம் வைரலாகிறது. இது ராஷ்மிகா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. முத்த காட்சி போஸ்டரை வலைத்தளத்தில் வெளியிடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ராஷ்மிகாவையும் விமர்சித்து உள்ளனர்.

இன்னும் சிலர் முத்த காட்சியில் நடித்துள்ள ராஷ்மிகாவின் துணிச்சலை பாராட்டி உள்ளனர். ராஷ்மிகா தமிழில் விஜய்யின் வாரிசு, கார்த்தியுடன் சுல்தான் படங்களில் நடித்துள்ளார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை