சினிமா செய்திகள்

புதிய தொழிலில் ஈடுபடும் ராஷ்மிகா

புஷ்பா பட ஹீரோயினான ராஷ்மிகா மந்தனா அழகு சாதன நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார். அந்த நிறுவனத்தின் சிறப்பு தூதுவராகவும் செயல்பட இருக்கிறார்.

தினத்தந்தி

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா, நீண்ட காலமாக விஜய்யுடன் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வந்தார். அந்த விருப்பம் 'வாரிசு' படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது.

'வாரிசு' படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர கைவசம் சில படங்களும் இருக்கிறது.

ராஷ்மிகா சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சத்தமே இல்லாமல் ஒரு அழகு சாதன நிறுவனத்தின் மீது முதலீடு செய்து வருகிறார். அந்த நிறுவனத்தின் சிறப்பு தூதுவராகவும் செயல்பட இருக்கிறார்.

முன்னணி கதாநாயகிகள் பலர் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு ஓட்டல்கள், அழகு சாதன நிலையங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறார்கள். பலர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். அந்த புத்திசாலித்தனமான கதாநாயகிகள் வரிசையில் ராஷ்மிகாவும் தற்போது இணைந்திருக்கிறார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்