சினிமா செய்திகள்

ஹரி இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக ராஷ்மிகா?

ஹரி இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.


சூர்யா காப்பான் படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து சூர்யா படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. வெற்றி மாறன், கவுதம் மேனன், ஹரி ஆகியோர் பெயர்கள் அடிபட்டன.

தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ஆறு, வேல், சிங்கம் படங்கள் வந்தன. சிங்கம் படத்தில் சூர்யாவின் துரை சிங்கம் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சிங்கம் 2-ம் பாகம் மற்றும் 3-ம் பாகங்கள் வெளிவந்தன.

தற்போது மீண்டும் ஹரி இயக்கும் படத்தில் நடிப்பதால் இது சிங்கம் 4-ம் பாகமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இது வேறு கதை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ராஷ்மிகா கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் அறிமுகமானார்.

தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் பெரிய வெற்றி பெற்றது.

பின்னர் தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தார். தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்