image courtecy:twitter@priya_Bshankar 
சினிமா செய்திகள்

'ரத்னம்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது

'ரத்னம்' படத்தின் முதல் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் விஷால் தற்போது 'ரத்னம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார். அவரது இயக்கத்தில் 3-வது முறையாக விஷால் இதில் இணைந்து உள்ளார். இது விஷாலுக்கு 34-வது படமாகும். இந்த படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை தயாரித்து உள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேகா பாடல் வரிகள் எழுதி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்து 'போஸ்ட் புரொடக்சன்' பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் முதல் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் 2வது பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அடுத்த மாதம் 26-ந்தேதி தியேட்டர்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்