சினிமா செய்திகள்

அவர் ஒரு ‘ஜீனியஸ்’ - நடிகை ரவீனா

துரந்தர் படத்தை பார்த்த நடிகை ரவீனா தாண்டன் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

மும்பை,

கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான ஆக்சன் திரில்லர் படம் துரந்தர் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்தது. ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகை ரவீனா தாண்டன் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். படம் பார்த்த உடனே இயக்குநர் ஆதித்யா தாரின் மனைவியும் நடிகையுமான யாமி கவுதமை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறினார். “உங்கள் கணவரின் பெரிய ரசிகையாகிவிட்டேன்” என்று தெரிவித்ததாக கூறினார்.

இயக்குநர் அதித்யா தரை ‘ஜீனியஸ்’ என புகழ்ந்த ரவீனா, நீண்ட நாட்களாக இல்லாத சரியான சினிமா அனுபவத்தை இந்த படம் மீண்டும் கொடுத்துள்ளது என்றார். புஷ்பா, கேஜிஎப் போன்ற படங்களைப் போல ‘துரந்தர்’ பார்வையாளர்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், ரன்வீர் சிங் நடித்துள்ள கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது என்றும், சஞ்சய் தத் மற்றும் அக்சய் கண்ணா ஆகியோரின் நடிப்பும் பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.

இந்நிலையில், இப்படத்தின் தொடர்ச்சியாக ‘துரந்தர்:தி ரிவெஞ்ச்’ மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளது. அதே நாளில் யாஷ் நடித்த ‘டாக்சிக்’ வெளியாக உள்ளதால், பாக்ஸ் ஆபீஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.