சினிமா செய்திகள்

ரவி மோகனின் ’புரோ கோட்’ பட வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு

விசாரணை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ரவி மோகனின் புரோ கோட் பட தலைப்பு வழக்கு டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புரோ கோட் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ரவி மோகன் ஸ்டுடியோவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, டெல்லி உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க இண்டோ-ஸ்பிரிட் பிவ்ரேஜஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்ததுடன், விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது.

ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் ரவி மோகன், கார்த்திக் யோகி இயக்கத்தில் புரோ கோட் என்ற பெயரில் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

இந்த தலைப்புக்கு எதிராக, இதே பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ-ஸ்பிரிட் பெவரேஜஸ் என்ற நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வணிகச்சின்ன மீறல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் தேதி புரோ கோட்தலைப்புக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இந்த இடைக்கால தடையை நீக்க கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை