சினிமா செய்திகள்

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்; கதாநாயகி கீர்த்தி சுரேஷ்?

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாம் என கூறப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1978-ல் வெளியாகி வசூல் குவித்த படம் சிகப்பு ரோஜாக்கள். ஆண்களை மயக்கி ஆசை வலையில் வீழ்த்தும் பெண்களை தேடிபிடித்து கொலை செய்து வீட்டு தோட்டத்தில் புதைக்கும் சைக்கோ கொலையாளி பற்றிய கதை. இந்த படம் இந்தியில் ராஜேஷ் கன்னா நடிப்பில் வெளியானது. இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை, இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பாரதிராஜா மகன் மனோஜ் முயற்சிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை பாரதிராஜாவே இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண்களை ஆசை வலையில் வீழ்த்தி ஏமாற்றும் ஆண்களை ஒரு பெண் பழி தீர்ப்பதுபோன்று கதாநாயகியை மையமாக வைத்து திரைக்கதையில் மாற்றம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் அல்லது சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பரிசீலிப்பதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை